×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் செல்போன் உதிரிபாகங்களின் விற்பனை பாதிப்பு

புதுக்கோட்டை,மே 25:  ஆன்லைன் வர்த்தகத்தால் செல்போன் உதிரிபாகங்களின் கடைகள் தொடர்ந்து  இழப்புகளுடன் இயங்கி வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சிறிய நகரங்களில் தொடங்கப்பட்ட உதிரி பாகங்களின் கடைகள் தற்போது மூடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொபைல் போன் இல்லாத மக்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சந்தையில் பல விதமான வசதிகளுக்கு ஏற்றார்போல் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செல்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செல்போனை வாங்கியவுடன் அதற்கு தேவையான உதிரிபாங்களை கட்டாயம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கார், இரு சக்கர வாகனம் வாங்கியவுடன் எஸ்டிரா பிட்டிங்ஸ் வகைகளை அவரவர் வசதிக்கு ஏற்றார்போல் வாங்கி தங்கள் வாகனத்தை மேலும் அழகாக காட்டுவார்கள். இதபோல் செல்போன் வாங்கியவுடன் அவரவரவர் வசதிக்கு ஏற்றார்போல் எஸ்டிரா பிட்டிங்ஸ் வாங்கி பயன்படுத்த தொடங்குவார்கள். இதனால் புதிய செல்போன் விற்பனை நிலையங்களை விட செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக செல்போன் கவர், மெம்மரி கார்டு, திரையை பாதுகாக்கக்கூடிய ஸ்கீரின் கார்டு உள்ளிட்ட பாகங்கள் கண்டிப்பாக செல்போன் வாங்கும் போது, வாங்குவார்கள்.

இதனால் தமிழகத்தில் இதுபோன்ற செல்போன் பாகங்கள் விற்பனை செய்ய பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை கடைகள் தொடங்கப்பட்டது. இதனால் எங்கு பார்த்தாலும் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து பொருட்களும் ஆன்லையனில் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக செல்போன் உதிரிபாகங்களை அதிகமானபேர் தமிழகத்தில் ஆன்லைனில் ஆடர்கொடுத்து வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் கடைகளில் விற்பனை குறைந்துவிட்டது. இதனால் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை மிகுந்த இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆன்லைனில் பல்வேறு தள்ளுபடிகள் கொடுத்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக கடைகளுக்கு நேரில் சென்று ஒரு செல்போன் கவர் வாங்கினால் ரூ.200 கொடுக்க வேண்டும். அதே பொருளை பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களில் தேடினால் ரூ.100க்கு கிடைத்து விடுகிறது. இதனால் தொலைபேசி பயன்பாட்டாளர்கள் படிப்படியாக நேடியாக கடைகளுக்கு செல்வதை தவிர்த்து ஆன்லைனில் செல்போன் உதிரி பாகங்கள் வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் வியாபாரம் குறைந்து தமிழகத்தில் உள்ள பெருவாரியான சிறிய நகரங்களில் உள்ள செல்போன் உதிரிபாங்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டு வருகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : district ,Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்