×

அரிமளம் அருகே புதிய வடிவமைப்பில் விற்பனைக்கு வந்துள்ள மண்பாண்டங்கள்

திருமயம், மே 25: திருமயத்தில்  மண்பாண்டத்தில் வந்துள்ள புதிய வடிவமைப்புகளால் ஓரளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலான கிராமங்களில் உள்ள குடும்பங்களில் மண்ணால் பாத்திரங்களே அதிகளவில் புழக்கத்தில் இருந்தது. உதாரணமாக மண்சட்டி, மண்பானை, நெற்குதிர்கள் போன்ற பல்வேறு பொருட்களை மண் பாத்திரமாகவே பயன்படுத்தி வந்தனர். மண்பாண்டங்கள் குளிர்ச்சியையோ, வெப்பத்தையோ அதிக நேரம் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. எனவேதான் இன்றளவும் ஒருசில இடங்களில் உள்ள தண்ணீர் பந்தல்கள், அலுவலகங்கள்,தொழிற்சாலைகளில் மண்பாண்டங்களில் குடிநீர் வைத்திருப்பதை காணமுடிகிறது. மேலும் மண்பாண்டத்தில் சமைத்த உணவுகள் நீண்டநேரம் கெட்டுப்போகமலும், சுவையானதாகவும் இருக்கும். மண்பாண்டத்தில் சமைத்தகஞ்சி, கூழ் சுவையும், மணமும் கிராமத்துவாசிகளுக்கு மட்டுமே தெரியும். இந்நிலையில் அறிவியல் வளர்ச்சி, மக்களின் அவசர வாழ்க்கையின் காரணமாக தமிழர்கள் அன்றாடம் பயன்படுத்திய மண்பாண்டங்கள், மண்பாண்டத்தில் சமைத்த உணவுகள் காட்சிப் பொருளாகமாறியது.மேலும் காஸ் அடுப்புகள், சில்வர், இரும்பு, அலுமினியம், நான்-ஸ்டிக் பாத்திரங்களின் வரவுகளால் மண் பாத்திரங்கள் அழிவின் விழிம்புக்குச் சென்றது. மண் பாத்திரங்கள் பெரும்பாலும் சூடேற அதிகநேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் மண் பாத்திரங்கள் விறகுஅடுப்புகளக்கு மட்டுமே உகர்ந்தது.

இதனை காஸ் அடுப்புகளில் வைத்து சமையல் செய்தால் காஸ் எளிதில் தீர்ந்துவிடும். இதனிடையே தற்போது தமிழகத்தில் அனைத்து கிராமங்களும் காஸ் அடுப்புகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதனால் மண் பாத்திரங்களில் சமைப்பது குறைந்து விற்பனையும் மந்தமாகி மண்பாண்ட தயாரிப்பில் பரம்பரைபரம்பரையாக ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விகுறியாகிஉள்ளது.பெரும்பாலான குடும்பங்கள் வேறுதொழிலுக்கு மாறிய நிலையில் ஒரு சிலர் மண்பாண்டங்களில் புதியவடிவமைப்பை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். அதாவது காலங்கலமாக பானை, சட்டி,  குதிர்வடிவில் மட்டுமேமண்பாண்டம் செய்த நிலையில் தற்போது தண்ணீர் சக்கு, கப்புகள்,  திருகுபைப்புடன் கூடிய குடிநீர் பானைகள், அணையாவிளக்கு, ஊதுபத்தி, மெழுகுவத்தி, சாம்பிராணி ஸ்டாண்டுகள், கலைநயத்துடன் கூடிய பூந்தொட்டிகள் உள்ளிட்ட ஏராளமான வடிவங்களில் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இதுபோன்ற தயாரிப்புகள் வாடிக்கையாளர்களை கவர்வதாகவும் ஓரளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். அரசு கூடுதல் கவனம்இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு கூடுதல் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அரசு பேராசிரியர்கள் நியமிப்பதில் தொடர்ந்து தாமதித்து வருவது மாணவர்களை அலட்சியப்படுத்துவதாகும். குறிப்பாக அறியவில், கணிதம் போன்ற பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் பேராசிரியர் இல்லை என்றால் எதுவும் தெரிந்துகொள்ள முடியாது, மணப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெற்றால் பணிக்கு புதுக்கோட்டையை தாண்டி எந்த ஊருக்கும் செல்ல முடியாது என்பது உண்மை. இதனால் இதனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : Arimala ,
× RELATED முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும்...