×

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

செந்துறை, மே 25:  செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன் தெரிவித்துள்ளதாவது:
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் பகுதியில் மானாவாரி சாகுபடியில் முக்கிய பயிர்களான மக்காச்சோளம் மற்றும் பருத்தி சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த பகுதியில் மக்காச்சோள சாகுபடி என்பது படைப்புழுவின் தாக்கம், அதிகமாக காணப்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழுவின் தாக்கம் அதிகரித்து பருத்தியின் மகசூல் குறைந்தது. இப்பொழுது கட்டுப்படுத்த மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர் அதற்கு முன்னர் கோடை உழவு செய்தல் அவசியம் என வேளாண்மை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்ற ஆண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய படைப்புழு தற்போது மண்ணுக்கு அடியில் கூட்டுப்புழுவாக, முட்டையாகவும் பல்வேறு நிலைகளில் உள்ளது. இது கோடை உழவு செய்யும்போது மண்ணுக்கு அடியில் இருந்து மேலே ஏற்றப்பட்டு அவை பறவைகளாலும், வேறு பல காரணங்களாலும் அழிக்கப்படுகிறது. கோடை உழவினால் மானாவாரி சாகுபடி பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாவதற்கு காரணமான புராணங்களும் பூசண வித்துக்கள் செலவின்றி அழிக்கப்படுகின்றன. மண்ணை உழவு செய்து ஒரு புழுதிப் படலம் அமைத்துவிட்டால் நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாகி விடாமல் இப்பொழுது படலம் தடுத்துவிடும், கோடை உழவு செய்யாத நிலங்களில் மண்ணில் மழைநீர் இறங்கும் திறன் இரண்டு செ.மீ அளவில் தான் இருக்கும். கோடைஉழவு செய்த நிலங்களில் மண்ணில் மழைநீர் 8 சென்டி மீட்டர் ஆக இருக்கும். கோடை உழவு செய்வதினால் மண்ணில் அதிக அளவு காற்றோட்டம் ஏற்படுத்தப்படுகிறது. மண்ணில் இயற்கை அமைப்பானது மாற்றம் செய்யப்பட்டு விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அமைகிறது. விவசாயிகளுக்கு பலவகைகளில் ஏற்படுத்தும் ஆபத்தை கோடை உழவு செய்து மானாவாரியில் அதிக லாபம் பெற வேண்டும் என செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Tags : Agronomist officials ,attack ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...