×

பக்தர்கள் வலியுறுத்தல் சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி விசிக, கூட்டணி கட்சியினர் கொண்டாட்டம்

ஜெயங்கொண்டம், மே 25: சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையொட்டி ஜெயங்கொண்டம் நான்குரோடு, கடைவீதி போன்ற இடங்களில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் நான்கு ரோட்டிலிருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலாளர் கணேசன், நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெயங்கொண்டம் தெற்கு மணிமாறன், தலைமை கழக பேச்சாளர் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். விசிக கொண்டாட்டம்: ஜெயங்கொண்டம் நான்குரோடு, கடைவீதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர் நான்கு ரோட்டிலிருந்து ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பொருப்பாளர்கள் சிபிராஜா, கண்கொளஞ்சி மற்றும் பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags : Devotees ,victory ,Chidambaram Thirumavalavan Vijik ,celebration ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி