×

1.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இடுக்கி எம்.பியானார் டீன் குரியகோஸ்

கூடலூர், மே 25:  தமிழக எல்லையை ஒட்டி  கேரள மாநிலத்தின் இடுக்கி மக்களவை தொகுதி 7   சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. 2014ல் இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி ஜோய்ஸ் ஜோர்ஜ் மீண்டும் சுயேச்சையாக போட்டியிட்டார். இம்முறையும் இடது ஜனநாயக முன்னணி அவருக்கு ஆதரவளித்தது. கடந்த முறை இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ்) வழக்கறிஞர் டீன் குரியகோஸ், பாஜ சார்பில் பிஜூ கிருஷ்ணனும் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வந்த தேர்தல் முடிவில், ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ்) வேட்பாளர் வழக்கறிஞர் டீன் குரியகோஸ் 4,98,493 வாக்குகள் பெற்றார். இடது ஜனநாயக முன்னணி ஆதரவுடன் போட்டியிட்ட ஜோய்ஸ் ஜார்ஜ் 3,27,440 வாக்குகளும், பாஜ சார்பில் போட்டியிட்ட பிஜூ கிருஷ்ணன் 78,648 வாக்குகளும் பெற்றனர். கடந்தமுறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த டீன் குரியகோஸ் இம்முறை 1,71,053 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழர்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் கட்டப்பனை, இடுக்கி பகுதியில் பொதுமக்களை சந்தித்து நன்றி கூறினார்.  

Tags : Dean Kuriyagos ,M. Piyani ,
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா