×

தேனியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை பெரியகுளம் திமுக எம்எல்ஏ பேட்டி

தேனி, மே 25:  பெரியகுளம் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ சரவணக்குமார், தேனியில் அதிகரித்து வரும் போக்குவரத்துக்கு ஏற்ப சுற்றுச்சாலை விரைவில் அமைய தேவையான நடவடிக்கைக்கு முயற்சிப்பதாக தெரிவித்தார். பெரியகுளம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.எஸ்.சரவணக்குமார் சுமார் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நேற்று அதிகாலை தேனியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்ரித்தாவிடம் பெற்றுக்கொண்டார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை பெரியகுளம் தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்ததன் மூலமாக,  தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முழுமூச்சில் பாடுபடுவேன். தேனியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பேன். பெரியகுளம் தொகுதியில் உள்ள வைகை, மஞ்சளாறு உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாற நடவடிக்கை எடுப்பேன். பெரியகுளம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். தேனி, பெரியகுளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை முயற்சிககை மேற்கொள்வேன் என்றார்.

Tags : interview ,MLA ,Periyakulam DMK ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...