×

கம்பம் உழவர் சந்தையில் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை

கம்பம், மே 25: கம்பம் உழவர்சந்தை அதிகளவில் கேரளா மக்களை சார்ந்தே உள்ளது. இங்கு அதிகமான அளவில் தினந்தோறும் சுற்று வட்டாரங்களான சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணதேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. ஏற்கனவே இங்கு வியாபாரிகள்தான் கடைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகார் உள்ளது. இதில் மொத்தமாக கேரளா வியாபாரிகளுக்கு காய்கறிகள் விற்பனை நடப்பதால் உள்ளூர் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக, காலையில் உழவர்சந்தைக்கு சென்றாலே அதிகவிலை வைத்து விற்பனை நடக்கிறார்கள். இதனால் பொதுமக்களே அதிர்ச்சி அடைந்து புகார் சொல்கின்றனர். இவர்களை பற்றி இங்குள்ள அதிகாரிகளிடம் புகாராக கொண்டு சென்றால் இவர்களும் கண்டும், காணாமல் உள்ளனர். இதனால் மலிவு விலையில் காய்கறிகள் வாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் தொடங்கப்பட்ட கம்பம் உழவர்சந்தை அதன் நோக்கத்தை இழந்து வருகிறது. எனவே, தேனிமாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` கம்பம் உழவர்சந்தையில் 115க்கும் மேற்பட்டகடைகள் உள்ளன. இதில் 60 கட்டப்பட்ட இடங்களில் கடைகளாகவும், மீதமுள்ளவை நடைபாதையாக போட்டு விற்பனை செய்கின்றனர். இதனை வேறுவிதமாக பயன்படுத்தும் வியாபாரிகள் காய்கறிகளை வெளியில் வாங்கி விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்யாமல் உள்ளதால் அன்றாடம் காய்கறிகள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்பவர்கள் விலையை கேட்டு அலறுகின்றனர்’’ என்றனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...