×

தேவதானப்பட்டியில் பாலீத்தின் பயன்பாடு அதிகரிப்பு

தேவதானப்பட்டி, மே 25:  தேவதானப்பட்டியில் பாலீத்தின் அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், அதை கட்டுப்பட்டுத்த கோரிக்கை எழுந்துள்ளது. தேவதானப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது அதிகளவு பாலீத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பாலீத்தின் தடை அமலில் வந்தபோது ஓரிரு மாதங்கள் தேவதானப்பட்டியில் இல்லாமல்  இருந்தது. இது தவிர தேவதானப்பட்டியில் உள்ள ஓட்டல்களில் பிளாஸ்டிக் இலை பயன்பாடு அதிகரித்து இருந்தது. இதன் பின் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு சில ஓட்டல்களில் பாலீத்தின் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `` தேவதானப்பட்டியில் தற்போது பாலீத்தின் பைகள் பெரும்பாலான கடைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில ஓட்டல்களில் பாலீத்தின் பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பாலீத்தின் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா