×

நாகை- தஞ்சை பைபாஸ் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் வர்த்தக தொழிற்குழும கூட்டத்தில் கோரிக்கை

நாகை, மே 25: நாகை- தஞ்சை பைபாஸ் சாலை பணிகள் 29.5 சதவீதமே முடிந்துள்ளதால் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென நாகையில் நடந்த இந்திய வர்த்தக தொழிற்குழும கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.நாகை இந்திய வர்த்தக தொழிற்குழுமத்தின் செயற்குழு கூட்டம் நாகையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சுபாஷ்சந்திரன், துணைத்தலைவர் மதியழகன், இணைச் செயலாளர் கணேசன், பொருளாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்துகொண்ட கீழ்வேளூர் எம்எல்ஏ மதிவாணன் நாகை மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். நாகை- தஞ்சை பைபாஸ் சாலை பணிகள் 5 ஆண்டுகளை கடந்தும் 29.5 சதவீதமே முடிந்துள்ளது. எனவே இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கீழ்வேளூரில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும். அக்கரைப்பேட்டை பகுதியில் கடல் உணவுப்பொருட்களை பதப்படுத்தும் வகையில் கடல் உணவு மண்டலம் அமைக்க வேண்டும்.நாகை அருகே பரவை கிராமத்தில் காய்கறி மொத்த விற்பனை நிலையம் அமைக்க வேண்டும். விழுந்தமாவடி அருகே வேட்டைக்காரனிருப்பு பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானத்தின் நகலை எம்எல்ஏ மதிவாணனிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

Tags : Nagu-Tanjai ,meeting ,Business Forum ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்