×

கரூர் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் சேர்க்கை 1,193 பேர் தேர்வு

கரூர், மே 25: கரூர் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நிறைவுபெற்றது.இதில்  1,193 பேர் தேர்வு  செய்யப்பட்டனர். கரூர் அரசுகலைக்கல்லு£ரியில் (தன்னாட்சி) கலந்தாய்வு முறையில் மாணவர்சேர்க்கை நடைபெற்றது. கடந்த 15ம்தேதி தொடங்கிய கலந்தாயவில் முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் சேர்க்கப்பட்டனர். அதன்பின்னர் தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கு தலா 60பேர் சேர்க்கப்பட்டனர். அறிவியல்பாடப்பிரிவுகளுக்கு 623பேர் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று கலந்தாய்வு நிறைவுபெற்றது.

நிறைவுநாளில் ஏராளமான மாணவ மாணவியர் குவிந்தனர். கல்லூரி முதல்வர் (பொ) ரவிச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்தாய்வினை நடத்தினர். பொருளாதாரம், வரலாறு, வணிக நிர்வாகவியல்,வணிகவியல், வணிககணினி, உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.இதில் 450பேருக்கு இடம்ஒதுக்கி அதற்கான ஆணை வழங்கப்பட்டது.கலந்தாய்வு முறையில் 1193 மாணவ மாணவியர் முதலாமாண்டு வகுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஜூன் 17ம்தேதி கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Tags : Karur Government Arts College ,
× RELATED 29 பயனாளிகளுக்கு A7.99 லட்சத்தில்...