×

திருடிய 2 பேர் போலீசில் ஒப்படைப்பு தப்பியோடிய நபரை பிடிக்க கோரி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தை மக்கள் முற்றுகை

கரூர், மே 25: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இதில்  ஒருவர் தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய நபரை பிடிக்க கோரி  தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.கரூர் தாந்தோணிமலையில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வருபவர் விஜயகுமார்(40). சத்தியமூர்த்தி நகரில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம்இரவு மாடிப்பகுதியில் மர்மநபர்கள் 3பேர் புகுந்து திருடியுள்ளனர். சத்தம்கேட்டுசென்றபோது ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் சேர்ந்து 3பேரை பிடிக்கமுயன்றபோது அப்பகுதியில் உள்ள பழைய எஸ்பி அலுவலக கட்டடத்திற்குள்ஓடினர். இதில் இருவர் சிக்கினர். பொதுமக்கள் தர்மஅடிகொடுத்து தாந்தோணிமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களது பெயர் வெள்ளியங்கிரி. வெள்ளையன், இதில் வெள்ளையன் காவல் நிலையத்தில் இருந்து ஓடியபோது கிணற்றில் விழுந்துவிட்டான்.

கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அங்கிருந்தும் ஓடிவிட்டான். இதனையடுத்து பொதுமக்கள் நேற்று மாலை தாந்தோணிமலை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.சம்பந்தப்பட்டவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.திருடிய பணம் ரூ.40ஆயிரம், வெள்ளிக்கொலுசுவைமீட்டுத் தர வேண்டும்.பழைய எஸ்பிஅலுவலக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். அல்லது இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : police station ,Dantontinam ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...