×

குளித்தலை சுங்ககேட்டில் இருந்து செல்லும் திருச்சி-கரூர் புறவழிச்சாலை தார்ச்சாலையாக மாற்றப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

குளித்தலை, மே25: குளித்தலை  சுங்ககேட்டில் இருந்து செல்லும் திருச்சி- கரூர்  புறவழிச்சாலை  தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், குளித்தலை வழியாக திண்டுக்கல், மணப்பாறை, முசிறியில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சி,கரூர் செல்ல வேண்டுமானால் சுங்ககேட் திருச்சி கரூர் புறவழிச் சாலையை இணைக்கும்  சாலை வழியாக செல்லவேண்டும். அதே போல் திருச்சி, கரூர் , மார்க்கத்தில் புறவழிச்சாலை வழியாக வரும் வாகனங்கள் மணப்பாறை, திண்டுக்கல், முசிறி, துறையூர், நாமக்கல், சேலம் செல்லவேண்டுமானால் புறவழிச்சாலையில் இருந்து சுங்ககேட் சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக தான் செல்கிறது. இதற்கு முன் மணல் லாரிகள் அதிகமாக சென்றதால் இச்சாலை பயன்படுத்தப்பட்டு இருந்தது.தற்போது மணல் லாரிகள் அதிகம் இல்லாததால் தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர்  வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில் இந்த சாலை தற்போது மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுவதால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து கடக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் ஒருசில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. மேலும்  மழைபெய்தால் இச்சாலை சேறும் சகதியாக தான் காணப்படும். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி குளித்தலை சுங்ககேட்டில் இருந்து புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையை புதுப்பித்து தார்சாலை  அமைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : passenger ,Trichy-Karur ,bathroom ,
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...