×

கும்மிடிப்பூண்டி பிடிஓ ஆபிசில் அம்மா சிமென்ட் தட்டுப்பாடு

கும்மிடிப்பூண்டி, மே 25: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், 61 ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளன. இந்த பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, கிராம மக்கள் குடிசை வீடு, ஓடு போட்ட வீடு ஆகியவற்றை மாற்றி மத்திய, மாநில அரசுகள் வழங்கும் தொகுப்பு வீடுகள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டி வருகின்றனர். இதற்கு, தேவைப்படும் அம்மா சிமென்ட், கம்பி, பொருட்களை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் படிவம் கொடுத்து பெற்று வீடுகளை கட்டி வருகின்றனர். அதற்கு  ஒரு மூட்டை அம்மா சிமென்ட் 190 ரூபாய் என தேவைக்கு ஏற்ப வங்கியில் காசோலையாக எடுத்து கொடுத்தபின் சிமென்ட் வழங்கப்படுகிறது. ஒரு வீட்டுக்கு சுமார் 100 மூட்டை சிமென்ட் வரை வழங்கப்படுகிறது.

 தற்போது, மூன்று மாதங்களாக கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட  வழுதலம்பேடு, எஸ். ஆர். கண்டிகை, தேர்வாய், சிறுபுழல்பேட்டை, மாதர்பாக்கம், உள்ளிட்ட 10 மேற்பட்ட ஊராட்சிகளுக்கு சப்ளை செய்து வந்த அம்மா சிமென்ட் தற்போது கிடைக்க தாமதமாகிறது. இதனால், ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அம்மா சிமென்ட் விநியோகிக்கும் அதிகாரிகளிடம், கேட்ட போது சிமென்ட் வருவதற்கு காலதாமதம் ஆகிறது. எனவே,  தட்டுப்பாடு இன்றி அம்மா சிமென்ட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.




Tags : office ,Kimmidipochi ,BTO ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...