×

கோடை வெப்பத்தை தணிக்க நுங்கு விற்பனை அமோகம்

திருவள்ளூர், மே 25: திருவள்ளூரில் கோடையில் குளிர்ச்சி தரும் பனை நுங்கு வியாபாரம் சூடுபிடித்தது. சிறுவர்கள், பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு நுங்கை வாங்கிச் செல்கின்றனர்.கோடை காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்புசணி, நுங்கு, இளநீர் அதிகளவில் விற்கப்படும். இதில் முதலிடம் பிடிப்பது நுங்கு வியாபாரம் மட்டுமே. கோடை காலங்களில் மட்டுமே கிடைக்க கூடிய பொருள் என்பதால் நுங்கு வியாபாரிகளிடம் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.திருவள்ளூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பனைநுங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூன்று நுங்கு ரூ.10 முதல் 20 வரை விற்பனை செய்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நுங்கு வியாபாரிகள் நுங்கை சீவி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, நுங்கு வியாபாரிகள் கூறுகையில், கோடைகாலங்களில் வெயிலில் அலையும் சிறுவர், சிறுமியர்களுக்கு வியர்வைக்குரு வருவதுண்டு. நுங்கை உடம்பில் புசினால் வியர்வைக்குரு மறைவதோடு உடலும் பளபளப்பாகும் என்றனர்.நுங்கு குறித்து சித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், ‘’நுங்கில் அதிக அளவில் வைட்டமின் பி மற்றும் சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஆஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன.இதனால் குழந்தைகளின் உடல் பலம் பெறும். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியைத் தூண்டும். மலச்சிக்கலை போக்கும். இவ்வளவு சிறப்பு பெற்ற நுங்கு கோடைகாலத்தில் மட்டும் கிடைக்கும்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...