×

குன்றத்தூர் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

பெரும்புதூர், மே 25: குன்றத்தூர் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் படப்பையில் நேற்று  நடந்தது. குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமை வகித்தார்.  இளைஞரணி அமைப்பாளர் வந்தேமாதரம் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் செல்வி பார்த்தசாரதி, ஹரி, ஜபருல்லா, தாவீது, சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை கட்சி கொடியேற்றி நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது.  மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், பாஸ்கரன், ஒன்றிய அமைப்பாளர்கள் அறிவொளி, மலர்விழி, வேல்முருகன், ஒரகடம் சிலம்புசெல்வன், ஊராட்சி செயலாளர்கள் வைப்பூர் ஹரிமுத்து, படப்பை ஏழுமலை, காவனூர் முருகன், சாலமங்கலம் வேலு, கரசங்கால் தட்சிணாமூர்த்தி, சேத்துப்பட்டு பூபதி, மணிமங்கலம் சுமன், வீரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Meeting ,General ,Kundirathur DMK ,
× RELATED திருவள்ளூரில் இறுதி கட்ட பிரசார...