வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வசூல் ₹1 கோடி மோசடி வழக்கில் கைதான பெண்ணை காவலில் விசாரிக்க மனு

சேலம், மே 25: சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, ₹1 கோடி மோசடி செய்த பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேலம் 5 ரோடு பகுதியில் ரானா மேன்பவர் கன்சல்டன்சி நிறுவனத்தை நடத்தி வந்தவர் உமாராணி. இவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, படித்த இளைஞர்களிடம் ₹3 லட்சம் முதல் ₹7 லட்சம் வரை வசூல் செய்தார். சுமார் 50க்கும் மேற்பட்டோரிடம் ₹1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தார்.

இவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி போலி விசா, பாஸ்ேபார்ட் கொடுத்து அனுப்பினார். இதனால், பாதிக்கப்பட்ட இளைஞர்கள், மீண்டும் வந்து பார்த்த போது, உமாராணியும், அவரது உறவினர் கார்த்தி என்பவரும் அலுவலகத்தை காலி செய்து கொண்டு தலைமறைவாகினர். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், அலுவலக பொருட்களை ஏற்றிச் சென்ற வண்டியின் பதிவெண்ணை வைத்து, அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர், உமாராணியையும், கார்த்திக்கையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளைஞர்களிடம் வாங்கிய பணம் எங்கு இருக்கிறது? என்பதை கைதான அன்று அவர்கள் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு ேபாலீசார் முடிவு செய்தனர். இதன்படி 5 நாட்கள் காவல் கேட்டு, சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இளைஞர்களிடம் வாங்கிய பணத்தை நிலமாக வாங்கப்பட்டுள்ளதா? அல்லது வேறு எங்கேனும் பதுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரிக்க உள்ளனர்.

Related Stories: