திமுக பிரமுகர் தற்கொலை குறித்து மனைவி, மகன்களிடம் கூடுதல் டிஎஸ்பி., விசாரணை

ஆத்தூர், மே 25: ஆத்தூர் அருகே திமுக பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது மனைவி, மகன்களிடம் விசாரணை அதிகாரி நேற்று நேரில் விசாரணை நடத்தினார். சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி விநாயகபுரம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பிரேம்குமார்(49). கடந்த 15ம் தேதி ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன், டிஎஸ்பி ராஜி ஆகியோர் தன் மீதும், தனது தம்பி செந்தில்குமார் மீதும், சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட்டு, பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டி விஷமருத்தி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பிரேம்குமார் மகன் அரவிந்தன் கொடுத்த புகாரினை விசாரிக்க, எஸ்பி தீபாகனிக்கர் விசாரணை அதிகாரியாக, கூடுதல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரை நியமித்தார்.

இந்நிலையில் நேற்று ஆத்தூருக்கு வந்திருந்த விசாரணை அதிகாரி சுரேஷ்குமார், விநாயகபுரம் நேதாஜி நகரில் உள்ள பிரேம்குமார் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்கள் அரவிந்தன், கோகுல் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் பிரேம்குமார் தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்த அவரது செல்போனையும் போலீசார் குடும்பத்தாரிடம் கேட்டு வாங்கிக் கொண்டனர். நேற்று முன்தினம் தினகரனில் விசாரணை துவக்குவதில் அதிகாரிகள் அலட்சியம் என செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: