சேலம் தொகுதியில் வெற்றி மு.க.ஸ்டாலினிடம் பார்த்திபன் வாழ்த்து

சேலம், மே 25: சேலம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கிய எஸ்.ஆர்.பார்த்திபன், அதிமுக வேட்பாளர் சரவணனை விட 1,46,926 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இரவு 1 மணிக்கு பார்த்திபனிடம் வெற்றிச் சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
Advertising
Advertising

இதையடுத்து அதிகாலையில், பார்த்திபன் கட்சியினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை புறப்பட்டுச் சென்றார். அங்கு நேற்று காலை, கட்சி அலுவலகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினை எஸ்.ஆர்.பார்த்திபன் சந்தித்து வெற்றிச் சான்றிதழை கொடுத்து வாழ்த்து பெற்றார். அப்போது, சேலம் மத்திய  மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் எம்பி கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் மற்றும் மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் கார்த்திகேயன், உமாராணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: