×

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நோட்டாவிற்கு கிடைத்த 17 ஆயிரம் வாக்குகள்

சேலம் மே 25: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நோட்டாவிற்கு 17,130 வாக்குகள் பதிவானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட 3,471 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 17வது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமக, மநீம, அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 22 பேர் போட்டியிட்டனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை சேலம் கருப்பூர் அரசு பொறியல் கல்லூரியில் நேற்று முன்தினம் (23ம் தேதி) நடந்தது. இதில் சுயேட்சை வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவானது.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் தெற்கு தொகுதியில் அதிகப்படியாக 3,314 வாக்குகள் பதிவானது. சேலம் வடக்கு தொகுதியில் 3,176 வாக்குகளும், சேலம் மேற்கு தொகுதியில் 2,381 வாக்குகளும், ஒமலூர் தொகுதியில் 2,724 வாக்குகளும், வீரபாண்டி தொகுதியில் 2,482 வாக்குகளும், எடப்பாடி தொகுதியில் 2,471 வாக்குகளும் மற்றும் தபால் வாக்குகளில் 132 வாக்குகளும் நோட்டாவிற்கு பதிவாகியிருந்தது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு மொத்தமாக 17,130 வாக்குகள் பதிவானது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சேலம் நாடாளுமன்ற  தேர்தலில் நோட்டாவிற்கு 20,601 வாக்குகள் பதிவானது. தற்போதைய தேர்தலில் 3,471 வாக்குகள் குறைவாக பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : constituency ,Salem ,Noata Lok Sabha ,
× RELATED மண்டல அலுவலகம் தெற்கு தொகுதி தேர்தல்