வலசையூரில் ஆடு திருடிய 2 பேருக்கு தர்மஅடி

சேலம், மே 25: சேலம் அருகே ஆடு திருடிய 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். சேலம் அருகேயுள்ள வலசையூர் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (70). இவர், நேற்று முன்தினம் காலை தனது வீட்டு முன் கட்டியிருந்த ஆடுகளுக்கு இலை, தழைகளை போட்டுவிட்டு, வீட்டிற்குள் சென்றார். அப்போது வீட்டு வாசலில் ஒரு பைக்கில் வந்து 2 பேர் இறங்கினர். அவர்கள், வாசலில் கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை திருடிக்கொண்டு, பைக்கில் வேகமாக தப்பினர்.

Advertising
Advertising

இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, திருடன் என சத்தம் போட்டார். உடனே அங்கிருந்தவர்கள், பைக்கில் தப்பிய இருவரையும் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். திருடப்பட்ட ஆட்டை மீட்டு, இருவருக்கும் தர்மஅடி கொடுத்தனர். பின்னர், வீராணம் போலீசாருக்கு தகவல் கொடுத்து ஒப்படைத்தனர்.

சிறப்பு எஸ்ஐ நடராஜன் விசாரணை நடத்தினார். அதில் அவர்கள், சேலம் மாசிநாயக்கன்பட்டி சத்யாநகரை சேர்ந்த மாதேஸ் (29), கனகராஜ் (22) எனத்தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: