போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி

சேலம் மே 25:சேலத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி இன்று (25ம் தேதி) தொடங்குகிறது. சேலம் மாநகர காவல் துறை சார்பில், போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டிக்கு மாநகர போலீஸ் ஏற்பாடு செய்துள்ளனர். போலீசாருக்கும்,  பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (25ம் தேதி) தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக இந்த போட்டி நடக்கிறது. முதலில் வரும் 64 அணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு, போட்டியில் கலந்து கொள்கின்றனர். இன்று தொடங்கும் போட்டி 3 இடத்திலும் காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

சேலம் அன்னதானப்பட்டி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் போட்டியை, கமிஷனர் சங்கர் தொடங்கி வைக்கிறார். இதேபோல் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் போட்டியை மாவட்ட எஸ்பி தீபா கனிக்கரும், சூரமங்கலம் நீலாம்பாள் பள்ளி மைதானத்தில்  நடக்கும் போட்டியை மாநகர துணை கமிஷனர் தங்கதுரையும் தொடங்கி வைக்கின்றனர். இறுதி போட்டி சேலம் காந்தி ஸ்டேடியத்தில் ஜூன் 2ம் தேதி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ₹25,000, இரண்டாம் பரிசு ₹15,000, மூன்றாம் பரிசு ₹7500, நான்காம் பரிசு ₹3000 வழங்கப்படவுள்ளது. இறுதி போட்டியின் ஆட்ட நாயகனுக்கு ₹1,000, தொடர் நாயகனுக்கு ₹3,000 பரிசு வழங்கப்படுகிறது.

Related Stories: