பள்ளி, கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கான ‘பேக்’ விற்பனைக்கு குவிப்பு

சேலம், மே 25:  ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் சேலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக எண்ணற்ற ரகங்களில் ‘பேக்’ விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ேகாடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  பேக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பேக்குகளை பெற்றோர்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இது குறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது:

பல ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எல்கேஜி.,யில் இருந்து பிளஸ் 2 வரையும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேக்குகளையும் தயாரித்து வருகிறோம். சிங்கிள் பார்டர், டபுள் பார்டர், டிரிபிள் பார்டர் பேக்குகளும், குழந்தைகளை கவரும் வகையில் சோட்டாபீம், பெண்டன் உள்ளிட்ட கார்ட்டூன் வகை பேக்குகளும், இயற்கை காட்சி, மிருகங்கள் உள்ளிட்ட பிரிண்டிங் பேக்குகளும் விற்பனைக்கு வைத்துள்ளோம்.  

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேக் ₹180 முதல் ₹300 வரையும், கல்லூரி மாணவர்களுக்கான  பேக் ₹200 முதல் ₹600 வரையும், லஞ்ச் பேக் ₹120 முதல் ₹170 எனவும், ஆபீஸ் பேக் ₹500 எனவும், ஷாப்பிங் பேக் ₹200 முதல் ₹300 எனவும், டிராவல்ஸ் பேக் ₹300 முதல் ₹500 என விற்பனை செய்யப்படுகிறது. தற்போது 20 சதவீதமாக உள்ள விற்பனை, அடுத்த வாரம் 80 சதவீதம் வரை உயரும். சேலம் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும், கிருஷ்ணகிரி, பெங்களூரு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பெற்றோர்கள் பேக்குகளை வாங்கிச்செல்கின்றனர்.  இவ்வாறு விற்பனையாளர்கள் கூறினர்.  

Related Stories: