மழை வேண்டி சிறப்பு வழிபாடு

வாழப்பாடி, மே 25: வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா, திரவுபதி அம்மன் கோயிலில், மழை வேண்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பால்குட ஊர்வலம், பொங்கல் வைத்தும் பொதுமக்கள் வழிபட்டனர். அதை தொடர்ந்து, அர்ஜூனன், பீமன், திரெளபதி அம்மன், குந்திதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: