வாழப்பாடி அருகே பரபரப்பு வனத்துறையினர் கண்டுபிடித்த துப்பாக்கி தொழிற்சாலைக்கு தீ வைப்பு

வாழப்பாடி, மே 25: வாழப்பாடி அருகே குடிசையில் இயங்கி வந்த நாட்டுத்துப்பாக்கி தொழிற்சாலையை வனத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று மர்ம நபர்கள் தொழிற்சாலைக்கு தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு புழுதிக்குட்டை காப்புக்காட்டில், வாழப்பாடி வனத்துறையினர் கடந்த 19ம் தேதி ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்கு சுற்றிக்கொண்டிருந்த மர்ம நபரை, வனத்துறையினர் பின்தொடர்ந்து சென்றனர்.

Advertising
Advertising

அவர் அருகில் விவசாய நிலத்தில் உள்ள குடிசைக்குள் சென்றார். அப்ேபாது குடிசையில் இருந்த பெண்ணும், மர்மநபரும் கண்ணிமைக்கும் நேரத்தில் குடிசையை விட்டு வெளியேறி தப்பியோடி விட்டனர். வனத்துறையினர் குடிசையின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து

சுமார் 20 நாட்டுத்துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான கட்டைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் 2 நாட்டுத்துப்பாக்கிகள் மற்றும் உதிரி பாகங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், வாழப்பாடி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். விசாரணையில், நாட்டுத்துப்பாக்கி தயாரித்தது, அதே ஊரை சேர்ந்த வரதன் மகன் ராமர் என்பதும், தோட்டத்தின் உரிமையாளர் கரியான் மகன் ராமர்(45) எனவும் தெரியவந்தது. ஆனால் தப்பியோடிய பெண் யார் என தெரியவில்லை.

இது குறித்து வனத்துறையினர் மற்றும் வாழப்பாடி போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் வாழப்பாடி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், நாட்டுத்துப்பாக்கி தயாரித்து வந்த தொழிற்சாலைக்கு, மர்ம நபர்கள் ேநற்று தீ வைத்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ேபாலீசார், ேநரில் சென்று ஆய்வு செய்து, தீ வைத்த மர்ம நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: