×

ராசிபுரம் -ஆண்டகளூர்கேட் இடையே சாலை விரிவாக்கப்பணிகள் தொடக்கம்

ராசிபுரம், மே 25: ராசிபுரம் -ஆண்டகளூர்கேட் இடையே சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளதால் வாகன  ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். ராசிபுரத்தில் இருந்து ஆண்டகளூர்கேட் செல்லும் வாகனங்கள் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம், எல்.ஐ.சி பில்டிங், முனியப்பன் கோயில்,  கவுண்டம்பாளையம், வழியாக ஆண்டகளூர்கேட்டிற்கு செல்கின்றன.

நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், சரக்கு லாரிகள், தனியார் பள்ளி, கல்லூரி பஸ்கள் என  பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ராசிபுரம் ஆண்டகளூர்கேட் வழியாக செல்கின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களுக்கு ஏற்ப, போதிய சாலை வசதி இல்லை. தவிர, சேலம் -கரூர் ரயில்வே பாதை ராசிபுரம் வழியாக செல்வதால், இந்த சாலை மேலும் குறுகலானது. முனியப்பன் கோயில் பின்புறம் முதல் கவுண்டம்பாளையம், ஆண்டகளூர்கேட்  வரை சாலை மிகவும் குறுகலாக மாறியது. அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து ராசிபுரம்- ஆண்டகளூர்கேட் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது இந்த சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக முனியப்பன் கோயில் பின்புறம் வளைவு சாலை பகுதியில், பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக சாலையோரம் தோண்டிய பள்ளங்கள், இரவில் தெரியும் ஒளிரும் ரிப்பனர் கட்டி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். சாலை விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டால் வாகனங்கள் செல்வது எளிதாவதுடன், விபத்துக்கள் குறையும் என்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Rasipuram ,Andalugurgeti ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து