×

மாவட்டத்தில் மீண்டும் கோடை மழைக்கு வாய்ப்பு

நாமக்கல், மே 25: நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் கோடை மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த நான்கு நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் லேசானது முதல், பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கோடை மழைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுவதுடன், பகல் வெப்பம் அதிகரிக்கும்.

காற்றின் திசையும் தென்மேற்கு திசையில் இருந்து வீசத்துவங்கியுள்ளதால் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாவதற்கான முன் அறிகுறியாக  எடுத்துக்கொள்ளலாம். இனி படிப்படியாக வெப்ப அதிர்ச்சி குறைந்து, வெப்ப அயற்சியும் குறையத்துவங்கும். இதன் காரணமாக கோழிகளில் இனி தீவன எடுப்பு உயர்வதைக் காணலாம்.

மீண்டும் கோடை மழை ஆரம்பமாக உள்ளதால் கால்நடைகளுக்கு தேவையான பசும்புற்கள் மேய்ச்சலில் கிடைக்கும். மேலும் கிடைக்கும் கோடை மழையை பயன்படுத்தி சிறு அளவில் பசுந்தீவனத்தை வளர்த்து கொடுக்கலாம். வெப்ப அயற்சியின் காரணமாக பாதிக்கப்பட்டு கோழிகள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை  கையாளவேண்டும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : district ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...