×

மாரியம்மன் கோயில் திருவிழா

சேந்தமங்கலம், மே 25: புதன்சந்தை அடுத்த திப்பக்காப்பட்டி காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. நேற்று முன்தினம், மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு வடிசோறு சமைத்து,  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில், அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்தனர். பின்னர், அம்மனுக்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சி மற்றும் கரகம் விடுதலும் நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Mariamman Temple Festival ,
× RELATED பூ மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு அக்னிச்சட்டி தயாரிப்பு பணி தீவிரம்