×

ஓசூர் இடைதேர்தலில் வெற்றி மு.க.ஸ்டாலினை சந்தித்து சத்யா எம்எல்ஏ வாழ்த்து

ஓசூர், மே 25: ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் ஓசூர் நகர பொறுப்பாளர் சத்யா போட்டியிட்டார். அவர் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 27 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜோதிபாலகிருஷ்ணாரெட்டி 91,814 வாக்குகள் பெற்றார். இதில், திமுக வேட்பாளர் சத்யா 23,213 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து, நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை, சத்யா எம்எல்ஏ, திமுக மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, வேப்பனப்பள்ளி எம்எல்ஏ முருகன், கும்மிடிபூண்டி முன்னாள் திமுக எம்எல்ஏ சேகர், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன் உள்ளிட்டோருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags : Satyam MLA ,Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு