×

தேன்கனிக்கோட்டையில் திமுக கூட்டணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தேன்கனிக்கோட்டை, மே 25: ஒசூர் இடைத்தேர்தலில்v திமுக வேட்பாளர் சத்யா மற்றும் கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் வெற்றி பெற்றதையடுத்து, தேன்கனிக்கோட்டையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர். ஒசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சத்யா, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதை கொண்டாடும் வகையில், தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில், திமுக பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,alliance ,celebration ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி