×

ஒசூர் பகுதிகளில் குடை மிளகாய் விலை உயர்வு

ஓசூர், மே 25:  ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் குடை மிளகாய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூர் பகுதி சீரான தட்பவெட்ப நிலையை கொண்டுள்ளதால், காய்கறிகள், கீரைகள், பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரம் ஏக்கரில் குடைமிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. குடைமிளகாய் நடவு செய்யப்பட்ட 90 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது.

ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய சுமார் ₹3 லட்சம் வரை செலவாகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘போதிய மழை இல்லாமல், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றியதால், குடைமிளகாய் உட்பட அனைத்து காய்கறிகளின் விளைச்சலும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ குடை மிளகாய் ₹20 முதல் ₹25 வரை விற்கப்பட்டது. தற்போது கிலோ ₹40 முதல் ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Tags : areas ,Hosur ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்