×

தர்மபுரி தொகுதியில் திமுகவுக்கு கிடைத்த 6,678 தபால் வாக்குகள்


தர்மபுரி, மே 25: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி வழக்கத்திற்கு மாறாக தாமதமாக தொடங்கியது. இதில், திமுகவுக்கு 6678 தபால் வாக்குகள் கிடைத்தது. தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் 11,686 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதேபோல, அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,690 மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,415 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் எண்ணும் பணி, நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இருப்பினும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் காலை 8.20 மணிக்கு, அதாவது 20 நிமிடங்கள் தாமதத்துக்கு பின்னரே தபால் வாக்குகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் எண்ணும் பணி தொடங்கியது.

அதேபோல், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தபால் வாக்கு முடிவுகள், இரவு 10 மணி வரை வெளியிடப்படவில்லை. நேற்று அதிகாலை தான் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு 6,678 வாக்குகள் கிடைத்துள்ளது. பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாசுக்கு 3,222 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 191, மக்கள் நீதி மய்யம் 133, சுயேட்சை வேட்பாளர்கள் பத்மராஜனுக்கு 6, துரைக்கு 4, சக்திவேலுக்கு 3, அறிவழகனுக்கு 5, டாக்டர் இளங்கோவனுக்கு 8 வாக்குகளும், சரவணனுக்கு 1 வாக்கும் கிடைத்துள்ளது. நோட்டாவுக்கு 75 பேர் வாக்களித்துள்ளனர்.

Tags : DMK ,constituency ,Dharmapuri ,
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...