அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு பணி நிறைவு

திருப்பூர்,மே25:  திருப்பூர், தலைமை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான 34 வகையான  சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. திருப்பூர், அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ளே  போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் தொடக்க நிலை இடை ஈட்டு மையம் ரூ.50 லட்சம்  மதிப்பில் கட்டப்பட்டு நிறைவு அடையும் நிலையில் உள்ளது.

இங்கு, நரம்பு  குழாய் குறைபாடு, டவுன் சிண்ட்ரோம், உதடு மற்றும் அன்ன பிளவு, கோனல்  பாதம், இடுப்பு வளர்ச்சி திறவு, பிறவி கண்புரை, பிறவி காது கேளாமல், பிறவி  இதய நோய், விழித்திரை முதிரா நிலை, ரத்த சோகை, விட்டமின் ஏ,பி மற்றும் டி,  ஊட்டச்சத்து குறைபாடு, ஐயோடின் குறைபாடு, தோல் வியாதி, காது பிரச்னை,  அறிவாற்றல் மற்றும் மொழி தாமதம், மூளை வளர்ச்சி குறைப்பாடு உள்ளிட்ட 34  வகையான குறைபாடுகளை சிறப்பான முறையில் உடனடியாக சரி செய்வதற்காக சிறப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இங்கு, குறைபாடுகள் உள்ள  குழந்தைகளுக்கு ஒரே இடத்தில் சிகிச்சை அளித்து பயன்பெறும் வகையில் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையின் வளாகத்தில் பின்புறம் ரூ.18  கோடி மதிப்பில் தாய்,சேய் நலம் பகுதிகளில் கர்ப்பிணி பெண்கள்,  குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க வளாகம் ஏற்பாடுகள் முடிவடையும் நிலையில்  வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் மாதத்தில் திறக்கப்படவுள்ளது.

Related Stories: