×

ரஷ்ய வர்த்தகர் ரூ.3 கோடி மோசடி

திருப்பூர்,  மே 25:  திருப்பூர் ‘ஆர்பிட்ரேஷன்’ கவுன்சில் கூட்டம்,  ‘சைமா’ அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. கவுன்சில் தலைவர் கருணாநிதி  தலைமை வகித்தார். திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர், ரஷ்ய நாட்டு  வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று, ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்து வந்த நிலையில்,  3 கோடி ரூபாய் வழங்கவில்லை என புகார் தெரிவித்தார். இது குறித்து கருணாநிதி கூறியதாவது:  

திருப்பூர் ஏற்றுமதியாளர்களிடம், பனியன் வியாபார நிறுவனங்களும், பல்வேறு  நாடுகளுடன் தொடர்பில் இருக்கின்றன. ஆர்டரை முடித்து அனுப்பிய பின்னரே, தொகை  வழங்கப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி, வெளிநாட்டு வர்த்தகர்கள் சிலர்,  ஏமாற்றி விடுகின்றனர். இதற்கு காரணம், பணபரிவர்த்தனை தொடர்பான விதிகளை,  முறையாக பின்பற்றப்படாமல் இருப்பதே ஆகும். ஆர்பிட்ரேஷன் கவுன்சிலுக்கு  கட்டுப்பட்டு வர்த்தகம் தொடர்பான அனைத்து வகையான பரிவர்த்தனைகளிலும் ரசீது,  ‘பில்’ இருந்தால் சட்ட ரீதியாக அணுகி, தீர்க்கலாம். ரஷ்ய நாட்டு வர்த்தகர்  தொடர்பாக புகார் விசாரிக்கப்படும். இவ்வாறு கூறினர்.

Tags : Russian ,trader ,
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...