×

நீலகிரி மக்களவை தொகுதியில் 8 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

ஊட்டி, மே 25: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகள், கோவை மாவட்டத்தை சேர்ந்த மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவிநாசி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் என நான்கு மாவட்டங்களை சேர்ந்த 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதே நீலகிரி மக்களவை தொகுதியாகும்.

இத்தொகுதியில் திமுக., சார்பில் ராசா, அதிமுக., சார்பில் தியாகராஜன், அமமுக., சார்பில் ராமசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ராேஜந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அசோக்குமார் மற்றும் சுயேட்சைகள் உட்பட 10 பேர் களத்தில் இருந்தனர். கடந்த மாதம் 18ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 73.7 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. நீலகிரி தொகுதியை பொறுத்த வரை 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 9 மணியளவில் முதல் சுற்று அறிவிப்பு வெளியானது இதில் மற்ற வேட்பாளர்களை காட்டிலும் திமுக., வேட்பாளர் ராசா அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். தொடர்ந்து எண்ணப்பட்ட 24 சுற்று முடிவுகளிலும் ராசாவே தொடர்ந்து முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் மக்கள் அளித்த அமோக ஆதரவின் காரணமாக நீலகிரி தொகுதிக்கு 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.

இதன்படி பவானிசாகர் தொகுதியில் திமுக., ராசா 1 லட்சத்து 40 ஆயிரத்து 40 வாக்குகளும், அதிமுக., தியாகராஜன் 68 ஆயிரத்து 033 வாக்குகளும், மநீம., ராஜேந்திரன் 6430 வாக்குகளும், அமமுக., 10281 வாக்குகளும் பெற்றனர். ஊட்டி தொகுதியில் ராசா 83 ஆயிரத்து 682 வாக்குகளும், தியாகராஜன் 38 ஆயிரத்த 236 வாக்குகளும், ராஜேந்திரன் 4685 வாக்குகளும், ராமசாமி 6026 வாக்குகளும் பெற்றனர்.

கூடலூர் தொகுதியில் ராசா 79 ஆயிரத்து 779 வாக்குகளும், தியாகராஜன் 39 ஆயிரத்து 961 வாக்குகளும், ராஜேந்திரன் 1595, ராமசாமி 6172 வாக்குகளும் பெற்றனர். குன்னூர் தொகுதியில் ராசா 76 ஆயிரத்து 047 வாக்குகளும், தியாகராஜன் 42 ஆயிரத்து 086 வாக்குகளும், ராஜேந்திரன் 4558 வாக்குகளும், ராமசாமி 5568 வாக்குகளும் பெற்றனர். ேமட்டுபாைளயம் ெதாகுதியில் ராசா 1 லட்சத்து 07 ஆயிரத்து 321 வாக்குகளும், தியாகராஜன் 76509 வாக்குகளும், ராேஜந்திரன் 12881 வாக்குகளும், ராமசாமி 4171 வாக்குகளும் பெற்றனர்.

அவினாசி தொகுதியில் ராசா 94 ஆயிரத்து 594 வாக்குகளும், தியாகராஜன் 76 ஆயிரத்து 864 வாக்குகளும், ராஜேந்திரன் 10 ஆயிரத்து 906 வாக்குகளும், ராமசாமி 8174 வாக்குகளும் பெற்றனர். தபால் வாக்குகளில் ராசாவிற்கு 2369 வாக்குகளும், தியாகராஜனுக்கு 360 வாக்குகளும், ராஜேந்திரனுக்கு 114 வாக்குகளும், ராமசாமிக்கு 27 வாக்குகளும் கிடைத்தன.

ஓட்டுமொத்தமாக ராசா 5 லட்சத்து 47 ஆயிரத்து 832 வாக்குகளும், தியாகராஜன் 3 லட்சத்து 42 ஆயிரத்த 009 பெற்றனர். மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தையும், அமமுக., 4வது இடத்தையும் பிடித்தன. திமுக, அதிமுக., வேட்பாளரை தவிர மநீம., அமமுக., உட்பட மற்ற 8 பேரும் டெபாசிட் இழந்தனர்.

Tags : Loss ,constituency ,Lok Sabha ,Nilgiri ,
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் IJK...