×

ஊட்டியில் நிலவும் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

ஊட்டி, மே 25: ஊட்டியில் நிலவும் இதமான காலநிலை காரணமாக  பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளிகள் கோடை விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசன் களைகட்டி உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி கடந்த வாரம் நடந்தது. இதனை சுமார் 1.65 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதன் காரணமாக ஊட்டியில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குறிப்பாக மலர் கண்காட்சி நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கார்னேசன் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தின் மாதிரியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இதனிடைேய இன்று துவங்கி இரண்டு நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் இந்த வார இறுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : crowd ,
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...