×

கையுன்னி உளுவாடு-மானிக்காடு சாலை சீரமைப்பு பணி மந்தம்

பந்தலூர், மே 25 :  பந்தலூர் அருகே கையுன்னி உளுவாடு-மானிக்காடு வரை தார்சாலை அமைக்கும் பணி மந்தகதியாக நடைபெறுவதால் அப்பகுதிமக்கள் அதிருப்தியடைந்துள்ளர். பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கையுன்னி உளுவாடு முதல் மானிக்காடு வரை 800மீ தூரமுள்ள தார்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்த, இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் சேரங்கோடு ஊராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் கோரிக்கை ஏற்று கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு, பணிகள் நடைபெறாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் இதுவரை தார்சாலை பணிகள் நடைபெறாமல் இருப்பதால் மழைக்காலங்களில் மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி தார்சாலைப்பணியை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Uluvat-Manikadu ,
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி