×

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு

மஞ்சூர், மே 25: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில்  போராட்டத்தில் குடும்பத்துடன்  பங்கேற்பது என நீலகிரி மாவட்ட சாலை பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்ட நெடுஞ்சாலைதுறை சாலைப் பணியாளர்கள் சங்க கூட்டம் மஞ்சூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கனகரத்தினம், பொருளாளர் பத்மநாதன், ஊட்டி வட்டகிளை தலைவர் ராமமூர்த்தி, குந்தா வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கோத்தகிரி வட்ட தலைவர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி பணப்பலன் வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெற ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு அரசின் பொதுநிதியில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் இறந்தவர்களின் சாலைப்பணியாளர்களின்  வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க தடையாக உள்ள விதிமுறைகளை தளர்த்தி, அவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

சாலை பராமரிப்பு பணிகளை தனியார் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ம் தேதி சென்னையில் முதன்மை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடக்கும் போராட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து சாலைப்பணியாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்பது என தீர்மானிக்கபட்டது. கூட்டத்தில் சாலைப்பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் வட்டகிளை துணை தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags : road workers ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல்...