×

உலக தரம் வாய்ந்த கல்வி தரும் சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லூரி

பொள்ளாச்சி சக்தி குழுமத்தின் ஒரு அங்கமாக, சக்தி தகவல் தொடர்பியல் மற்றும் மேலாண்மை கல்லூரி(சிம்ஸ்) 2010ம் வருடம் பத்மபூஷன் டாக்டர் நா.மகாலிங்கம் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த மேலாண்மை கல்வியை தருவதற்காக பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டது.

கல்லூரி தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர், பாலசுப்பிரமணியம் தலைமையில் சிம்ஸ் கல்லூரி மிக குறுகிய காலத்தில் சிறந்த மேலாண்மை கல்லூரியாக வளர்ந்துள்ளது. உயர் கல்வி அமைப்பான ஏஐசிடிஇ டெல்லி அனுமதி பெற்று சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மேலும், உயர்கல்வி அமைப்பான யுஜிசியின் அந்தஸ்து பெற்றுள்ளது. டாக்டர் பி.சுப்பிரமணியன் கல்லூரியின் ஆலோசகராக உள்ளார். தற்போது 240 மாணவர்கள் மேலாண்மை கல்வி படித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் சிம்ஸ் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் சிறந்த தேர்ச்சி விகிதத்தை பெறுவதுடன் கடந்த 5 ஆண்டுகளில் 21 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றனர்.

மேலும், நூறு சதவீத மாணவர் சேர்க்கையுடன், மாணவர்களுக்கு நூறு சதவீத வேலை வாய்ப்பும் அளித்து வருகிறது.  சிம்ஸ் கல்லூரியில் மிகச்சிறந்த உட்கட்டமைப்பு வசதி, குளிர்சாதன வகுப்பறைகள், 24 மணி நேர வைபை வசதி, அனுபவம் மற்றும் திறமை மிக்க பேராசிரியர்கள், தமிழக அரசின் உதவித்தொகை, சுய நிர்வகிப்பு கலை பட்டய படிப்பு, கல்லூரி பேருந்து, மிகச்சிறந்த விடுதி வசதி, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்பயிற்சி, இலவச லேப்டாப், பாடபுத்தகங்கள், வெளிநாடு மற்றும் உள்நாட்டு கல்வி பயணங்கள், கல்வி உதவித்தொகை, அரசு, வங்fpக மற்றும் ரயில்வே பணிகளுக்கான பயிற்சி தேர்வு கல்லூரியில் அளிக்கப்படுகிறது.  தற்போது, 2019-20ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி-99429-06682, 94432-18685, 94862-52363.

Tags : World Communist Education Energy Information Management College ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...