ஆழியார் அருகே யானை தாக்கி சிறுமி பலி

பொள்ளாச்சி, மே 25:  பொள்ளாச்சி அருகே நவமலையில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பில் வசிப்பவர் முருகன், தொழிலாளி. இவரது மகள் ரஞ்சனி(7). முருகன் வழக்கம் போல் நேற்று வேலைக்கு சென்றார். பின் மாலையில் ரஞ்சனி தனது தாய் சித்ரா மற்றும் உறவினர்களுடன் ஆழியார் சென்றிருந்தார்.

அங்குள்ள கடையில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டு இரவு 7 மணிக்கு பஸ்சில் வந்தனர். மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருந்து 300 மீ தூரத்தில் பஸ் நின்றது. பஸ்சிலிருந்து ரஞ்சினி மற்றும் அவரது தாயார் உறவினர்கள் இறங்கி இருள் சூழ்ந்த காடு வழியாக குடியிருப்பை நோக்கி நடந்து சென்றனர். அப்போது அடர்ந்த காட்டுப் பகுதி மறைவிடத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை ஒன்று, வெளிச்சத்தை பார்த்ததும் அந்த பகுதியை நோக்கி வந்தது.

இதை அறிந்த ரஞ்சனி மற்றும் உறவினர்கள் நான்கு பேர், யானையிடம் இருந்து தப்பிக்க சிதறி ஓடினர். இதில் பதறிய சிறுமி ரஞ்சனி தடுமாறிக் கீழே விழுந்தால். அப்போது அங்கு வந்த காட்டு யானை ரஞ்சினியை துதிக்கையால் தூக்கி பள்ளத்தில் வீசியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மற்றும் வனத்துறையினர் மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

ஆனால் செல்லும் வழியிலேயே ரஞ்சனி உயிரிழந்தார். சிறுமி ரஞ்சனி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது. இதையடுத்து நவமலை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் அந்த யானையை விரட்டும் பணியில் வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். திமுகவி.,னர் கொண்டாட்டம் பொள்ளாச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் சண்முகசுந்தரம் வெற்றிபெற்றதையடுத்து, வால்பாறையில் திமுகவி.,னர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Related Stories: