×

நகராட்சி பள்ளியை சீரமைக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி, மே 25:   பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 3 மேல் நிலைப்பள்ளி, 8 நடுநிலைப்பள்ளி, 7 துவக்கப்பள்ளி என மொத்தம் 18 பள்ளிகள் நகராட்சி பராமரிப்பில் உள்ளது. இவற்றில் குறிப்பிட்ட பள்ளிகளில் மதில் சுவர், கழிப்பிட வசதி உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதில், கோட்டூர் ரோட்டில் பல கோடி செலவில் கட்டப்பட்ட நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி போதிய பரமரிப்பு இல்லாததது பொதுக்களிடையே வேதனையை ஏற்படுத்துகிறது. இப்பள்ளியை சுற்றிலும் முறையான பராமரிப்பு இல்லாததால் பெரும்பாலான இடங்களில் செடிகள், புற்கள் சூழ்ந்து புதர்மண்டி கிடப்பதால் விஷ சந்துக்கள் உலாவரும் பகுதியாக உள்ளது.

மேலும், பள்ளியின் பின்புறம் உள்ள பெரிய அளவிலான விளையாட்டு மைதானம் முழுவதும் படர்ந்திருக்கும் செடி கொடிகளை அப்புறப்படுத்தாமலும் முறையாக பராமரிக்காமலும் புதர்மண்டி கிடப்பதால், அங்கு மாணவிகள் விளையாடுவதை தவிர்க்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியின் முகப்பில் உள்ள பூங்கா போன்ற பகுதியில் அரியவகை செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன.
ஆனால், கடந்த சில மாதங்களாக, அவை எந்த பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பள்ளி திறப்பதற்கு முன்பாக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவில் புதர்மண்டி வளர்ந்திருக்கும் செடிக்கொடிகளை முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை