×

கோவையில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சுகாதாரத்துறை அலுவலகம் வந்தன

கோவை, மே 25:  கோவை மக்களவை தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதார துறை இணை இயக்குனரகம் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 2,504  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இவை கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 6 ஸ்ட்ராங்க் அறையில் 24 மணி நேரமும் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் மே 23 இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

Tags : Coimbatore ,Department of Health ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...