சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு

பொள்ளாச்சி, மே 25: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில், கடந்த ஆண்டில் தென்மேற்கு  பருவமழை பெய்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கத்தாலும் மழைபொழிவு இல்லாமல் வறட்சி ஏற்பட்டது. வறட்சியால் கிராமங்களில் உள்ள பல கிணறு, குளம் மற்றும் குட்டைகள் வற்றி தண்ணீரின்றி காணப்பட்டது. குடி நீருக்காக, கிராம மக்கள் பல கிமீ., தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில ஊராட்சிகளில் அதிகபட்சமாக 20 நாட்கள் வரை குடிநீர் விநியோகம் இல்லாமல் உள்ளது. பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால், போர்வெல்களில் தண்ணீர் இல்லாமல் போனது. வறட்சியை எதிர்கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறினாலும், இன்னும் பல கிராமங்களில் தண்ணீர் தட்டுபாடு என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சில இடங்களில் தண்ணீர் விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை உறுவாகியுள்ளது.  இந்நிலையில் தங்களுக்கு தேவைகேற்ப தண்ணீரை சேமித்து வைக்க, பல கிமீ., தூரம் வாகனங்களில் சென்று தண்ணீர் பிடித்து செல்கின்றனர். எனவே, கோடை வெயிலின் தாக்கம் நிறைவடையும் வரை, முறையாக குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: