×

மீனாட்சியம்மன் ேகாயிலில் நிரந்தர மருத்துவ முகாம் நிர்வாகம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, மே 25: மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் நிரந்தர மருத்துவ முகாம் நடத்த அனுமதி கேட்டு, மீனாட்சி மிஷன் மருத்துவமனை விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. காரைக்குடியை சேர்ந்த வக்கறிஞர் மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள், அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்களுக்கு அவசர மருத்துவ உதவி கிடைக்க கோயில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து, முதுநிலை மருத்துவ அலுவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘எங்கள் மருத்துவமனை சார்பில் கோயில் வளாகத்தில் நிரந்தர மருத்துவ முகாம் நடத்த தயாராக இருக்கிறோம். அதற்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதிகள், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் திருவிழா மற்றும் பிற நாட்களில் மருத்துவ முகாம் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்பாக பதிலளிக்கவும் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...