×

மதுரை மார்க்கெட்டில் ரூ.500லிருந்து முல்லை பூ விலை ரூ.200க்கு சரிந்தது

மதுரை, மே 25: முல்லை பூ வரத்து அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இதன் விலை சரிந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு விற்றது, நேற்று ரூ.200க்கு விற்பனையானது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, திண்டுக்கல், நிலக்கோட்டை, கொடை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து இருக்கிறது.

கடந்த சில தினங்களாகவே இப்பகுதிகளில் இருந்து வரும் முல்லை பூ வரத்து அதிகரித்துள்ளது. தொடர் விஷேச தினங்கள் இல்லாத காரணத்தால் தற்போது இதன் தேவை குறைந்து விலை சரிந்துள்ளது. பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘கடந்த சில தினங்களாக கடும் வெயில் காரணமாக பூக்கள் விளைச்சல் அதிகரித்தது. தொடர்ந்து வரத்து அதிகரிப்பால், விலை குறைந்திருக்கிறது’’ என்றனர். பூக்கள் விலை நிலவரம் (கிலோவில்): மல்லிகை ரூ.150, முல்லை ரூ.200, அரளி ரூ.80, ரோஜா ரூ.80, பிச்சி ரூ.250, பட்டன்ரோஸ் ரூ.100, தாமரை ஒரு பூ ரூ.10.

Tags : Mullai ,
× RELATED அதிமுகவில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்