ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் பயணிகளை புறக்கணிக்கும் புறநகர் பஸ்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஒட்டன்சத்திரம், மே 25: ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் புறநகர் பஸ்கள் பயணிகளை ஏற்ற மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்திற்கு திருப்பூர், கோவை, தாராபுரம், பழநி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, தேனி, மதுரை மார்க்கமாக தினமும் 800க்கும் மேற்பட்ட பஸ்கள் செல்கின்றன. 1000க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர். தவிர சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், ஊழியர்கள், வியாபார்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால் பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்திற்கு வரும் புறநகர் பஸ்கள் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். மேலும் பஸ் அந்த இடத்தில் நிற்காது, நீங்கள் வேறு பஸ்சில் ஏறி செல்லுங்கள் என கூறுகின்றனர். இது தெரியாமல் சிலர் ஏறி விட்டால் அவர்களை சிறிதுதூரம் சென்ற பின் நடுரோட்டில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் ஒட்டன்சத்திரத்தில் இருந்து செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் புறநகர் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: