பாலக்காடு ரயிலில் பணப்பையை விட்டு சென்ற அரக்கோணம் தம்பதி போலீசார் மீட்டு ஒப்படைப்பு

பழநி, மே 25:  பாலக்காடு ரயிலில் அரக்கோணம் தம்பதி விட்டு சென்ற பணப்பையை ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (35). வியாபாரி. இவர் தனது மனைவி ஏஞ்சல் (33) மற்றும் குழந்தைகளுடன் கொடைக்கானல் செல்வதற்காக நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரலில் இருந்து பாலக்காடு செல்லும் ரயிலில் ஏறி உள்ளார். நேற்று காலை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளனர்.

அப்போது ஏஞ்சல் தான் கையில் வைத்திருந்த பையை ரயிலிலேயே விட்டு சென்று விட்டார். பையில் 4 பவுன் தங்க நகை, ரூ.4 ஆயிரம் ரொக்கம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் இருந்தது. பையை காணாது திடுக்கிட்ட ஏஞ்சல் இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசில் புகார் செய்தார். ரயில்வே இன்ஸ்பெக்டர் கீதாதேவி உத்தரவின்பேரில் உடனடியாக போலீசார் முடுக்கி விடப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பழநி ரயில் நிலையத்தில் பையை பத்திரமாக மீட்ட போலீசார் ஏஞ்சலிடம்  ஒப்படைத்தனர். தேவாலயம் எதிர் தெருவில் தண்ணீர் தொட்டியை கடமைக்கு வைத்து சென்று விட்டனர். கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து பல வாரங்களாகி விட்டது. இதனால் அங்கிருந்து கிளம்பும் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. மூக்கை பிடித்து  கொண்டே நிற்க வேண்டிய அவலம் உள்ளது.

Related Stories: