ஞாயிறுதோறும் படியுங்கள் திண்டுக்கல்லில் கோடைகால கேரம் பயிற்சி முகாம் நிறைவு

திண்டுக்கல், மே 25: திண்டுக்கல் மாவட்ட கேரம் கழகமும், ஸ்ரீவாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து கடந்த 15 நாட்களாக கோடை கால கேரம் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தியது. பள்ளி தாளாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார். முதல்வர் கல்யாணி தலைமை தாங்கினார். மாவட்ட கேரம் கழக செயலாளர் பிரவீன் செல்வகுமார் பயிற்சி அளித்தார்.

இதில் 80 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். பயிற்சி நிறைவு நாளான நேற்று நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஸ்ரீ வாசவி பள்ளியை சேர்ந்த முகமது இர்பானும், மாணவியர் பிரிவில் சேரனும் முதல் பரிசு பெற்றனர். 18 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பெலிக்ஸ்ம், மாணவியர் பிரிவில் அபிநயாவும் முதல் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கேரம் கழக சேர்மன் நாட்டாமை காஜாமைதீன், தலைவர் ஜோதிமுருகன் ஆகியோர் கோப்பையை வழங்கி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். முகாம் ஏற்பாட்டினை உதவி செயலாளர் மருதமுத்து, பொருளாளர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர் ஜெஸ்பர் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கொடைக்கானல் மலைப்பாதையில் யானைகள் உலா வாகன ஓட்டிகள் உஷார்