இந்திய அளவில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை ஸ்டாலின் தலைமை எட்டியுள்ளது

திண்டுக்கல், மே 25: இந்தியா அளவில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எட்டியுள்ளோம் என மாநில துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி கூறினார். திண்டுக்கல் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த வேலுச்சாமிக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

இந்திய அளவில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை திமுக கூட்டணி,  தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் எட்டியுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளை பெற உள்ளோம். இதற்கு பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். திண்டுக்கல்லை பொறுத்தவரை கடந்த 1980க்கு பின்பு திமுக வெற்றி பெறவில்லை. அதன்பின் 35 ஆண்டுகள் கழித்து திண்டுக்கல் மக்களவை தொகுதி மக்கள் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர்.

மக்களுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம். இந்த வெற்றி மூலம் தமிழகமே ஸ்டாலின் பின்னால் நிற்கிறது. அவரின் ஓய்வில்லாத உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இதை கருதுகிறேன். மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு நாங்கள் பாடுபடுவோம். இந்த நேரத்தில் கட்சி நிர்வாகிகம், தோழை கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’  என்றார்.

Tags : Stalin ,Tamil Nadu ,
× RELATED முதல் நாளிலேயே எதிர்பார்த்ததை விட...