பழநி கோயிலில் வைகாசி விசாக உற்சவ சாந்தி கந்தவிலாஸ் விபூதி நிறுவனம் சார்பில் நடந்தது

பழநி, மே 25: பழநி கோயிலில் வைகாசி விசாக உற்சவ சாந்தி கந்தவிலாஸ் விபூதி நிறுவனம் சார்பில் நடந்தது. பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 12ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மலைக்கோயிலில் உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடந்தது. மலைக்கோயிலின் தெற்கு உள்பிரகாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கலச தீர்த்தம் வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. முன்னதாக கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து யாகபூஜையில் வைக்கப்பட்ட கலசம் மற்றும் அபிஷேக பொருட்களுடன் உள்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் உச்சிகாலத்தில் கலச நீரைக் கொண்டு உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உபயதாரர்கள் கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன்விஸ்ணு, நரேஸ்குமரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். தொடர்ந்து மாலை பெரியநாயகி அம்மன் கோயிலில் சாயரட்சை பூஜையின்போது உற்சவ சாந்தி  நடந்தது.

Related Stories: