கோயில் கும்பாபிஷேகம்

நத்தம், மே 25: நத்தம் அருகே முளையூர் ஊராட்சி சின்னமுளையூர் கட்டபுளிபட்டியில் உள்ளது முத்தாலம்மன் கோயில். இங்கு நேற்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 நாட்கள் யாகசாலையில் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 3வது நாள் காலையில் கோ, கஜ, அஷ்வ பூஜைகள் மற்றும் 4ம் கால யாக பூஜைகள் நடந்தன. பின்னர் மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து கரந்தமலை, அழகர்மலை, காசி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், சிறுமலை உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

Related Stories: